டி20 அணியில் ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க முயற்சி.. திணறும் பிசிசிஐ!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

டி20 அணியில் ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க முயற்சி.. திணறும் பிசிசிஐ!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடவுள்ள டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ பேசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

இந்த தோல்வி காரணமாக இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் சோகத்தில் உள்ள நிலையில், 36 வயதை எட்டிவிட்டதால், விரைவில் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்லவுள்ள நிலையில், இந்த தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாட விருப்பமில்லை என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்று புரியாமல் பிசிசிஐ திணறிபோயுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், நேற்று ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது.

இவ்வாறான ஒரு நிலையில், கடந்த டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத  ரோகித் சர்மாவை, தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட பிசிசிஐ பேசி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஐபிஎல் தொடருக்கு பின்னர் டி20 உலகக்கோப்பை தொடர்  வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்குள் இந்திய டி20 அணியை கட்டமைக்க வேண்டிய நிலையில் பிசிசிஐ உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp