தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா... என்ன தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 116 இன்னிங்ஸ் விளையாடிய ரோகித் சர்மா 209 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதுவரையில், 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3737 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,709 ரன்கள் குவித்துள்ளார்.
இதே போன்று 151 டி2 0 போட்டிகளில் விளையாடி 3974 ரன்கள் குவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 14 மாதங்களுக்கு பிறகு இடம் பெற்று விளையாடினார்.
இதில் முதல் டி20 போட்டியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2ஆவது டி20 போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து அதிக முறை (12) கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
இந்த நிலையில், தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 116 இன்னிங்ஸ் விளையாடிய ரோகித் சர்மா 209 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
சீண்டிய பங்களாதேஷ் வீரர்கள்... கதையை முடித்த இளம் இந்திய அணி.. அதிரடி வெற்றி!
இன்னும், 3 சிக்ஸர்கள் மட்டும் அடித்தால், 212 சிக்ஸர்கள் அடித்து எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்து, முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைப்பார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 233 சிக்ஸர்கள் அடித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் மோர்கன் முதலிடம் பிடித்துள்ளார்.
2ஆவது இடத்தில் 212 சிக்ஸர்கள் உடன் தோனி இருக்கிறார். ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 171 சிக்ஸர்கள் அடித்து 4ஆவது இடத்தில் இருக்கிறார்.
நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 170 சிக்ஸர்கள் உடன் 5ஆவது இடத்திலும், விராட் கோலி 138 சிக்ஸர்கள் உடன் 6ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 136 சிக்ஸர்கள் உடன் 7ஆவது இடத்திலும், டிவிலியர்ஸ் 135 சிக்ஸர்கள் உடன் 8ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.