கேப்டன் பதவி யாருக்கு... பிசிசிஐ அடித்த பல்டி.. சிக்கலில் ரோஹித் சர்மா.. கம்பீர் சொன்னால் தான் நடக்கும்?
ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முன்பு நிச்சயம் கௌதம் கம்பீரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பிசிசிஐ அந்த முடிவை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே இருப்பார் என செய்தி வெளியான நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது அதில் ஒரு சிக்கல் இருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் அணிக்கு யார் கேப்டனாக இருப்பது? என்பதில் கௌதம் கம்பீரின் வார்த்தைக்கு அதிக மதிப்பு அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
முனனதாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய டெஸ்ட் அணி, படுமோசமான தோல்விகளை சந்தித்து இருந்ததுடன், மொத்தம் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது.
அதிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியின் போது ரோஹித் சர்மா அணியில் இருந்து தாமாகவே விலகிவிட்டார்.
எனினுத், அதிகாரப்பூர்வமாக அவர் தான் இன்னும் டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளதுடன், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பமில்லை எனவும் தெரிவிக்க இல்லை.
அந்த வகையில் தொடர்ந்து டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா இடம் பெற விரும்புகிறார் என எடுத்துக் கொள்ளலாம். அவரது ஒரு நாள் போட்டி ஆட்டம் அண்மையில் நன்றாக இருந்தது.
ஆனால், டெஸ்ட் போட்டியின் பேட்டிங் படுமோசமாகவே இருக்கும் நிலையில், அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படுமா என்ற ஒரு கேள்வி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முன்பு நிச்சயம் கௌதம் கம்பீரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பிசிசிஐ அந்த முடிவை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி மூன்று முக்கிய ஐசிசி தொடர்களில் பங்கேற்க உள்ளதுடன், அந்த இரண்டு ஆண்டுகள் முழுவதும் ரோஹித் சர்மாவால் விளையாட முடியுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
எனவே, அவரை நம்பி மட்டும் இனி முடிவுகளை எடுக்க முடியாது என்ற நிலையில், அந்த இரண்டு ஆண்டுகளுக்கும் பல்வேறு திட்டங்களை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே, அவரது முடிவுக்கு தான் இங்கே இனி அதிகம் மதிப்பளிக்கப்படும் என்ற நிலையில், ரோஹித் சர்மாவின் டெஸ்ட் அணி கேப்டன்சி மற்றும் டெஸ்ட் அணி வாய்ப்பு என்பது, கம்பீரின் கைகளில் தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.