ருதுராஜ் கெய்க்வாலுக்கு ஆப்பு வைத்த ரோஹித் சர்மா.. கில்லுக்கு கொடுத்த மதிப்பு கூட இல்லை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்னத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்னத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய டி20 அணியில் மாற்று துவக்க வீரராக ஒரு வருடத்துக்கும் மேலாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட், 2024 டி20 தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
ரோஹித் சர்மாவுடன் மற்றொரு துவக்கக் வீரராக ஐபிஎல் தொடரில் பெரிதாக ரன் குவிக்காத ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருப்பதுடன், மாற்று வீரராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடருக்கான முதல் 15 வீரர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக பயன்படுத்த இந்திய அணி நான்கு மாற்று வீரர்களையும் அறிவித்து உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்காத சுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், பெரிதாக ரன் குவித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராகக் கூட இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படாதது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் முதுகில் ரோஹித் சர்மா குத்தி விட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.