இந்திய அணியில் ருதுராஜ் இல்லை.. ரோஹித் சர்மா முடிவு... பிசிசிஐ அதிரடி
கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்கட்ட இந்திய அணி நாளைக்குள் அறிவிக்கப்பட உள்ளது. 15 வீரர்களை மட்டுமே அறிவிக்க முடியும் என்பதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு துவக்க வீரர்கள் மற்றும் ஒரு மாற்று துவக்க வீரரை மட்டுமே அணியில் தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா என ஆறு வீரர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் மூத்த வீரர்களான விராட் கோலியும், கேப்டன் என்பதால் ரோஹித் சர்மாவும் முதல் நிலை துவக்க வீரராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே மாற்று துவக்க வீரர் இடத்துக்கு நான்கு வீரர்கள் மோதி வருகின்றனர். இவர்களில் சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்வார் என்பதால் அவரை அணியில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ஜெய்ஸ்வால் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்பதுடன், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.