காயமடைந்து வலியால் துடித்த ருதுராஜ்; ரசிகர்கள் அதிர்ச்சி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.
நடப்பு தொடரில் புதிய கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் செயல்பட்டு வரும் நிலையில், பேட்டிங்கில் கான்வே போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடாத நிலையில் சிஎஸ்கேவுக்கு பின்னடைவாக உள்ளது.
இந்த நிலையில் ருதுராஜ் தனி ஆளாக பேட்டிங்கில் மிரட்டி வருவதுடன், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு டேரல் மிட்செலுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார்.
மூன்று சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் வெளுத்து வாங்கிய ருதுராஜ் பேட்டிங் செய்யும்போது அவருக்கு கையில் வலி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் பில்டிங் செய்யும்போது சர்துல் தாக்கூர் ஓவரில் பில்டிங் செய்யும் போது ருதுராஜ் பந்தை பிடித்தவுடன் வலியால் துடித்தார்.
ஏற்கனவே கைவிரலில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேட்டில் மீண்டும் பந்து பட்டதால் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனை எடுத்து மருத்துவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து ருத்ராஜுக்கு சிகிச்சை கொடுத்தார்கள்.
காயம் அதிகமாக இருந்தால் பேட்டை பிடிப்பது கடினம் என்பதால் அடுத்த போட்டியில் ருதுராஜ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.