சொதப்பும் இந்திய அணி.. தேர்வுக்குழு செய்த தவறு... ருதுராஜ் அருமை இனியாவது புரியுமா?

ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.

சொதப்பும் இந்திய அணி.. தேர்வுக்குழு செய்த தவறு... ருதுராஜ் அருமை இனியாவது புரியுமா?

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிப்பெற்ற நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு சில விடயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு முன்பாகவே கொழும்பு மைதானம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்று இந்திய அணி நிர்வாகம் நன்றாக அறிந்திருந்ததுடன், ரோஹித் சர்மாவும் இதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இருந்தும், வெல்லாலகே, ஹசரங்கா, அசலங்கா, வாண்டர்சே ஆகிய இலங்கை அணியின் ஸ்பின்னர்களிடம் சிக்கி இந்திய அணி தடுமாறி வருகிறது. 

ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக  விராட் கோலி தடுமாறி வந்துள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்திலேயே ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தடுமாறும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இலங்கை மண்ணில் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் எப்படி சொதப்புவார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை. 

இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு ஆகியோரை ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

இடது - வலது காம்பினேஷனில் பேட்டிங் வரிசையை அமைக்க கம்பீர் திட்டமிட்டிருந்தால், தேர்வு குழு மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்து முன்பே அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும். 

இந்திய அணி டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை என்பதுடன், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா என்று தரமான 3 வீரர்கள் உள்ளனர்.

அவர்களையும் தேர்வு செய்யாமல் இந்திய அணியில் உள்ள ரிஷப் பண்ட்-ஐ பிளேயிங் லெவனில் சேர்க்காமல் கம்பீர் சொதப்பி உள்ளார்.

இந்திய அணியில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் முதன்மையான வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியமானவர். ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளில் ஸ்பின்னர்களுக்கு எதிரான சச்சின் போல பொளந்து கட்டுவது ருதுராஜ் மட்டும் தான்.

ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்த ஆஃப் திசையில் 5 ஃபீல்டர்கள் நின்றாலும், அசராமல் பவுண்டரி அடித்தார். ஏற்கனவே இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடி சிறப்பாக செயல்பட்ட ருதுராஜை பேக் அப் வீரராக கூட தேர்வு செய்யாமல் இந்திய அணி நிர்வாகம் தவறு செய்தது. 

அதற்கான பலனாக இலங்கை அணிக்கு எதிரான ஸ்பின்னர்களிடம் 9 விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியை சந்தித்துள்ளது என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp