ருதுராஜை சேக்க முடியாது.. கம்பீர் அதிரடி அறிவிப்பு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களின் ஓபனர் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

ருதுராஜை சேக்க முடியாது.. கம்பீர் அதிரடி அறிவிப்பு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களின் ஓபனர் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

ரோஹித் மற்றும் கோலி ஆகியோரது இடங்களை பிடிக்க ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

அனைவரும் மிகச்சிறந்த வீரர்கள் என்பதால், போட்டி நிச்சயம் கடுமையாகதான் இருக்கும். ஐபிஎலில் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு, இந்திய அணியில் ரெகுலராக வாய்ப்பு கிடைப்பது இல்லை. 15 பேர் பட்டியலில் சேர்த்தாலும், அவரை பிளேயிங் லெவனில் எப்போதாவது தான் சேர்க்கிறார்கள்.

ஜிம்பாப்வே தொடரில் கூட ருதுராஜ் கெய்க்வாட்டை 4ஆவது இடத்தில்தான் விளையாட வைத்தார்கள். இந்நிலையில், இலங்கை ஒருநாள், டி20 என இரண்டு தொடர்களிலும் ருதுராஜை சேர்க்கவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். அப்படியிருந்தும் தற்போது இலங்கை ஒருநாள் தொடரில் சேர்க்கவில்லை. சாம்சனை ஒதுக்குவதைப் போலதான், தற்போது ருதுராஜை ஒதுக்கவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த அணியில் தனக்கு எப்படிப்பட்ட வீரர்கள் தேவை என்ற கேள்விக்கு கௌதம் கம்பீர் பதில் அளித்துள்ளார். அதில், ‘‘ஆக்ரோஷமாக, அதிரடியாக, தைரியமாக விளையாடும் வீரர்கள்தான் தனக்கு தேவை’’ என கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதாவது, அபிஷேக் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரைப் போல முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் வீரர்கள் தான், தனக்கு தேவை என்பதை கம்பீர் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். 

ருதுராஜ் துவக்கத்தில் அதிக பந்துகளை எடுத்துக் கொண்டப் பிறகுதான், அதிரடி காட்டக் கூடியவர். இதனால், இனி ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp