அணி மீட்டிங்கில் நடந்த சண்டை... தோனியை அன்பாலோ செய்த ருதுராஜ்... பெரும் சர்ச்சை!
தோனியின் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 18ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் திடீரென்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால்தான், ருதுராஜ் நீக்கப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, மகேந்திரசிங் தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்தனர். இதற்கு கலவையான விமர்சனம் எழுந்தது. தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்த அணியை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்ற ரசிகர் ஒருவர், அவரது பாலோயிங் லிஸ்டில் சென்று தோனியின் பெயரை தேடிப் பார்த்து உள்ளார்.
அப்போது, தோனியின் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டை கட்டாயப்படுத்தி கேப்டன் பதவியை பறித்ததாக தகவல் வெளியாகி உள்ளதுடன், பேட்டிங் வரிசையை சரியாக கட்டமைக்கவில்லை என அணி நிர்வாகம் ருதுராஜ் மீது அதிருப்தியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அஸ்வினின் பேட்டிங்கை சேப்பாக்கத்தில் பயன்படுத்தவில்லை எனக் கூறியும் ருதுராஜ் மீது நிர்வாகம் அதிருப்தியில் இருந்ததாகவும், தோனியும் இதில் தலையிடாமல் இருந்ததாகவும், இதனால்தான் சிஎஸ்கே மற்றும் தோனி மீது ருதுராஜ் அதிருப்தியில் இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள்.
உண்மையில், ருதுராஜ் கெய்க்வாட் ஒருமுறை கூட தோனியை பாலோ செய்ததே கிடையாது என்றும், தற்போது, அவரதை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியிருப்பதால், திடீரென்று இதனை ஒரு பிரச்சினையாக கிளப்பியுள்ளதாக தெரிகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 18ஆவது சீசனில் 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளதுடன், ஒரு அணி குறைந்தது 14 புள்ளிகளை பெற வேண்டும் என்பதால், சிஎஸ்கே அடுத்த 8 போட்டிகளில் குறைந்தது 6 வெற்றிகளை பெற்றாக வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அடுத்த லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை, எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியிலும் தோற்றால், அது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.