ஆப்பு வைத்த சாய் சுதர்ஷன்... சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்திய அணி வீரர்கள்!
தமிழக வீரர் சாய் சுதர்ஷனால் இரண்டு இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக வீரர் சாய் சுதர்ஷனால் இரண்டு இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய டெஸ்ட் அணி அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் நோக்கத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் தற்போது புச்சி பாபு டெஸ்ட் தொடரில் பங்கேற்று மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
டிஎன்சிஏ 11 அணிக்கு எதிராக மும்பை அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்த இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் 2 மற்றும் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்க்ஸ்களில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், ஒருமுறை டக் அவுட் ஆகினார்.
மறுபுறம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வாய்ப்புக்காக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக ஆடி வருகிறார்.
அவர் தனது இரண்டாவது போட்டியில் சதம் அடித்து ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோருக்கு போட்டியாக வந்திருக்கிறார் சாய் சுதர்சன்.
புச்சி பாபு டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்பராஸ் கான் ரன் குவித்தால் இந்திய அணியில் வாய்ப்பைப் பெறலாம் என அவர்கள் திட்டமிட்டே பங்கேற்றனர்.
ஆனால், அதற்கு நேர் மாறாக அந்தத் தொடரில் அவர்கள் ரன் குவிக்காததால் அவர்களின் செயல்பாடு குறித்த சந்தேகம் அதிகரித்து உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெற்று உள்ள நிலையில், மாற்று வீரர்களுக்கான இடம் மட்டுமே தற்போது காலியாக உள்ளது.
அந்த இடத்தை பிடிக்கவே ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான் ஆகியோருக்கு இடையே போட்டி இருந்தது. தற்போது அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை அளிக்கும் வகையில் சாய் சுதர்ஷனும் அந்தப் இணைந்து உள்ளார்.
இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 178 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இந்திய அணி அடுத்து வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
அதற்கு முன் துலீப் டிராபி தொடரை நடத்த உள்ளது பிசிசிஜ, இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள வீரர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
சாய் சுதர்சன் கவுன்டி போட்டியில் சதம் அடித்திருக்கும் நிலையில் துலீப் டிராபியில் மேலும் ஒரு சதம் அடித்தால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதனால், ஸ்ரேயாஸ் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகலம்.