6 பந்துகளுக்கு 4 ரன்கள்…டெல்லி அணியை திணறடித்த திட்டம் இது தான்… ஆவேஸ் கான் நெகிழ்ச்சி!
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.
17வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ரியான் பிராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் ஆகியோர் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தனர்.
இதையும் படிங்க : வீணாய் போன இளம் வீரரின் அதிரடி.. கடைசி வரை த்ரில்.. ரிஷப் பந்த்திற்கு வந்த சோதனை!
மிடில் ஓவர்களில் ரிஷப் பண்ட் உள்ளிட்ட டெல்லி பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்த நிலையில், சாஹல் உள்ளிட்ட ராஜஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சாலும் கடைசி ஒரு ஓவருக்கு 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை டெல்லி அணி சந்தித்தது.
கடைசி ஓவரை வீசிய ஆவேஸ் கான் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி கூட விட்டுகொடுக்காமல் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றி குறித்து பேசிய ஆவேஸ் கான், “கடைசி ஓவருக்கான எனது திட்டம் தெளிவாக இருந்தது. ஆடுகளம் ஒரு திசையில் மிக பெரியது என்பதால் நான் அதிகமான wide yorker தான் வீச வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன்.
ஒவ்வொரு பந்தை வீசுவதற்கு முன்பாகவும் அடுத்த பந்தை எப்படி வீச வேண்டும் என்பதை சற்று சிந்திப்பதற்காக 5 நொடிகள் எடுத்து கொண்டேன். பேட்ஸ்மேன் சிறப்பான ஷாட் அடித்தால் அது அவருக்கு நல்லது ஆனால் நான் என் மீது முழு நம்பிக்கை வைத்தே பந்துவீசினேன்.
எங்கள் அணியில் டிரண்ட் பவுல்ட், பர்கர், சந்தீப் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் பலர் இருப்பதால் நான் அவர்களிடம் இருந்து அதிகமான விசயங்களை கற்றுக்கொண்டேன்.
ராஜஸ்தான் அணி நிர்வாகமும், பயிற்சியாளர் சங்ககாராவும் எங்களுக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்து வருகின்றனர், இதன் காரணமாக தோல்வியை நினைத்து பயப்படாமல் எங்களால் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
நான் எப்போதும் எனது பந்துவீச்சில் முன்னேற்றை ஏற்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். சஞ்சு சாம்சனும் ஒரு கேப்டனாக எங்களுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறார், இதனால் எங்கள் மீது பெரிதாக அழுத்தம் எதுவும் ஏற்படுது இல்லை.
பந்துவீச்சில் என்னை முன்னேற்றி கொண்டே இருப்பதற்காக வலைபயிற்சியில் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.