சரிகமப இறுதிப் போட்டியில் அசானி ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

சரிகமப இறுதிப் போட்டியில் அசானி ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் சீசன் 3 வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் வைத்து டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை நேரடியாக ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் அது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து ஜூனியருக்கான சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில் இலங்கை கண்டி என்ற பகுதியை சேர்ந்த அசானி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று சில வாரங்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். 

அவருடைய திறமையை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அசானி பாடிய வீடியோவை சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பிறகு அசானியால் ஆடிஷனில் கலந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. 

அசானி தமிழ்நாட்டை நம்பி வந்திருந்த நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று நடுவர்கள் முடிவெடுத்து இருந்தனர். முதல் பாடலின் மூலமாக அசானி அரங்கத்தில் இருந்தவர்களை மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களையும் வியந்து போக வைத்துவிட்டார். பிறகு சோசியல் மீடியா முழுவதும் இலங்கை பெண் அசானி குறித்து செய்திகள் தான் அதிகமாக உலா வந்தது.

பிறகு இந்த நிகழ்ச்சியின் அசானி செலிபிரிட்டியாக மாறி இருந்தார். அதைத்தொடர்ந்து அசானிக்கு ரசிகர்கள் அதிகளவில் இருந்தனர். இந்த நிலையில் இந்த சரிகமப சீசன் 3 லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கான பைனலிஸ்ட் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 

அதில் அசானியின் பெயர் இடம் பெயரவில்லை. அந்த வகையில் ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் குமார், கனிஷ்கர், கவின் என ஆறு பேர் இறுதிக்கட்ட நிகழ்ச்சிக்கு தேர்வாகி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதனால் ரசிகர்கள் இலங்கைப் பெண்ணான கில்மிஷா இறுதி லிஸ்ட் இருந்தாலும் அசானி இல்லையே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. 

அதோடு அசானியை ஜீ தமிழ் டிஆர்பிக்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொண்டார்களா என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp