சரிகமப இசை நிகழ்ச்சியில் சாதித்த இலங்கை குயில் கில்மிஷா! குவியும் வாழ்த்துக்கள்!
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
நடைபெற்று வந்த சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரண்டு பேர் கலந்து கொண்டார்கள்.
எனினும் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தார். இருப்பினும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய அளவில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார்.
இறுதி சுற்றில் தகுதி பெற்று இருந்த இலங்கையை சேர்ந்த கில்மிஷா தனது சிறப்பான திறனை சென்னையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் சரிகமப இசை நிகழ்ச்சியின் முழுவதும் தன் வசீகர குரலால் அனைவரையும் ஈர்த்து வந்த இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.