4 நாட்களாக காய்ச்சலால் நிற்கவே முடியலையாம்.. ஆனால் 5 விக்கெட்டை வீழ்த்திய அப்ரிடி.. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

4 நாட்களாக காய்ச்சலால் நிற்கவே முடியலையாம்.. ஆனால் 5 விக்கெட்டை வீழ்த்திய அப்ரிடி.. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஒரேயொரு கேட்சை கோட்டைவிட்டதே காரணமாக அமைந்தது. 

இந்த போட்டியில் 5வது ஓவரின் போது டேவிட் வார்னர் கொடுத்த எளிய கேட்சை இளம் வீரர் உஸாமா மிர் நழுவவிட்டார்.

இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணி மீதான செயல்பாடுகள் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இதனைத் தொடர்ந்து கேட்சை கோட்டைவிட்ட உஸாமா மிர் தனது ட்விட்டர் பக்கத்தில், டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டதற்காக வெட்கப்படுகிறேன். கேட்சை விட்டது என்னுடைய தவறுதான்.

கேப்டன் பாபர் அசாம் என் மீதும், திறமை மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்னால் விளையாட முடியவில்லை. 

நான் நழுவவிட்ட கேட்ச் தோல்விக்கு வழிவகுத்தது சோகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மோர்கல் பேசுகையில், பாகிஸ்தான் அணியின் உஸாமா மிர்-க்கு ஆதரவாக இருக்கின்றனர்.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேட்சை நழுவ விடலாம். அதனை போட்டியின் ஒரு அங்கமாக பார்த்து கடக்க வேண்டும். 

நிச்சயம் இதில் இருந்து மிர் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன். உலகக்கோப்பை தொடரில் தவறுகளின் சதவிகிதம் குறைவாக இருக்க வேண்டும். ஷாகின் அப்ரிடி மிகச்சிறப்பாக பந்துவீசினார்.

தொடக்கத்திலேயே ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது. கடந்த 4 நாட்களாக ஷாகின் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார். 

அந்த நேரத்தில் பயிற்சியை கூட செய்ய முடியவில்லை. ஒரேயொரு பயிற்சி செஷனுக்கு பின் இப்படி பந்துவீசியது ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp