பாகிஸ்தான் அணியில் ஏற்பட்டுள்ள பிளவு? பாபர் அசாம் மீது புகார்.. களமிறங்கிய மாமனார்..

பாபர் அசாம் மீது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி  பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

பாகிஸ்தான் அணியில் ஏற்பட்டுள்ள பிளவு? பாபர் அசாம் மீது புகார்.. களமிறங்கிய மாமனார்..

பாகிஸ்தான் அணி  நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பல முன்னாள் வீரர்களும் கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளனர்.

பாபர் அசாம் மீது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி  பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம்  விலகி இருந்ததுடன், டி20 கேப்டனாக ஷாகின் ஆப்ரிடி நியமிக்கப்பட்டார். 

அதனையடுதத்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், தற்போது பேசியுள்ள ஷாகித் அப்ரிடி, டி20 போட்டியில் ஷாகினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முடிவெடுத்திருந்தால், டி20 உலக கோப்பை வரை அவரை கேப்டனாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஷாகின் அப்ரிடிக்கு பாபர் அசாம், ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்றும், மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கும் போது அதனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறி இருக்க வேண்டும்.

ஷாகின் அப்ரிடியை கேப்டனாக தேர்வு செய்திருந்தால், அனைவரும் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்ற முடிவை பாபர் அசாம் எடுத்து இருக்க வேண்டும். 

பாபர் அசாம் அதனை செய்திருந்தால் அவர் மீதான மதிப்பு அதிகரித்திருப்பதுடன் கிரிக்கெட் உலகத்துக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருப்பார்.

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைக்கு பாபர் அசாம் மட்டுமல்ல தேர்வு குழுவும் தான் காரணம். ஏனென்றால், சில தேர்வு குழு உறுப்பினர்கள் பாபர அசாம்க்கு கேப்டன்சியை செய்ய தெரியவில்லை என்று கூறி உள்ளதுடன், அவரையும் மீண்டும் நியமித்திருக்கிறார்கள் என்று ஷாகித் ஆப்ரிடி கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp