நாங்க ஒன்னும் ரோபோ கிடையாது.... பிசிசிஐயின் புது விதிமுறையை எதிர்த்த இளம் வீரர்...
ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதியில் விதர்பா மற்றும் மத்தியபிரதேசமும், இரண்டாவது அரையிறுதியில் தமிழ்நாடு மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அணி, மகாராஷ்டிராவில் மட்டும் மூன்று அணி என மொத்தம் 38 அணிகள் இத்தொடரில் பங்கேற்று வருகிறது.
ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதியில் விதர்பா மற்றும் மத்தியபிரதேசமும், இரண்டாவது அரையிறுதியில் தமிழ்நாடு மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கி 146 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தமிழ்நாட்டு வீரர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய மும்பை அணி 106/7 என படுமோசமாக சொதப்பிய நிலையில், அடுத்து வந்த ஷர்தூல் தாகூர் சதம் அடித்து வியக்க வைத்தார். இதனால், மும்பை அணி 353/9 ரன்களை எடுத்து, 200+ ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரஞ்சிக் கோப்பை தொடர், ஜனவரி முதல் தற்போது, மார்ச் வரை நடப்பதுடன், ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்ல இந்த 65 நாட்களில் 10 போட்டிகளில் ஆட வேண்டும்.
ஒரு ரஞ்சி போட்டி முடிந்து, அடுத்த ரஞ்சி போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவேளை இருக்கிறது. இப்படி ஓய்வில்லாமல் விளையாடும்போது, வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஷர்தூல் தாகூர், ஓய்வு நாட்களை அதிகப்படுத்த வேண்டும். இந்த வருடம்தான் ஓய்வு நாட்களை குறைத்துவிட்டனர் என குற்றம் சாட்டினார்.
''முன்பெல்லாம் ஒரு போட்டிக்கு இடையில் 5 நாட்கள் வரை ஓய்வு கொடுப்பார்கள். ஆனால், தற்போது பைனல் வரையும் போட்டி முடிந்ததும் 3 நாட்கள் தான் ஓய்வு கொடுக்கிறார்கள். இப்படியே, இரண்டு சீசன்கள்வரை விளையாடினால், வீரர்களுக்கு காயம் ஏற்படும்'' என்றார்.
பொதுவாகவே முதல் மூன்று போட்டிகளுக்கு பிறகு, ஓய்வு இடைவேளை 4 நாட்களாக இருக்கும். அதன்பிறகு, நான்கு நாட்களும், நாட்அவுட் சுற்றின்போது 5 நாட்களும் ஓய்வு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.