இவங்க 2 பேரால் தான் இந்திய அணிக்கு ஆபத்து.. முன்னாள் வீரர்கள் கவலை
இந்திய அணி 15 பேர் கொண்ட அணியை அறிவித்து உலகக்கோப்பைக்கு தயாராக உள்ளது. அந்த 15 வீரர்களில் ஷர்துல் தாக்கூர் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிலை மட்டுமே மோசமாக உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த முறை உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்திய அணி 15 பேர் கொண்ட அணியை அறிவித்து உலகக்கோப்பைக்கு தயாராக உள்ளது. அந்த 15 வீரர்களில் ஷர்துல் தாக்கூர் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிலை மட்டுமே மோசமாக உள்ளது.
இது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் சமீபத்திய போட்டிகளின் ரெக்கார்டு அப்படி இருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன்களை வாரிக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அந்த தொடரில் ஷர்துல் 14 ஓவர்களில் மொத்தம் 113 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
ஷர்துல் ஒட்டுமொத்தமாக இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவரது எகானமி 6.24 ஆக இருந்தது. இது மிகவும் மோசமானது.
ஷர்துல் பேட்டிங்கிலும் ஆல் - ரவுண்டராக ரன் சேர்ப்பார் என்றே அவரை அணியில் சேர்த்தது இந்திய அணி நிர்வாகம், அதனாலேயே சில போட்டிகளில் முகமது ஷமியை விட அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆனால், அவர் தொடர்ந்து இப்படி ரன்களை விட்டுக் கொடுத்தால், இந்தியாவின் உலகக்கோப்பை வாய்ப்பு கேள்விக்குறியாகும் என்பது உறுதி.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் ஒருநாள் போட்டி ஃபார்மும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதுவரை, அவர் 30 ஒருநாள் போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 27.79 என்ற பேட்டிங் சராசரியில் 667 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் அவர் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்ததன் மூலம் அவர் ஃபார்முக்கு திரும்பி விட்டார் என நம்பப்படுகிறது.
ஆனாலும், அந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா தன் முழு பலத்துடன் ஆடவில்லை. உலகக்கோப்பையின் போது, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரில் ஆட தயாராக இருப்பதால் சூர்யகுமார் யாதவ் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறமாட்டார்.
ஆனால், ஒரு மாற்று வீரர் தகுதியற்றவராக இருந்தால், அதனால் வீரர்கள் காயம் அடையும் போது அவரை ஆட வைக்க வேண்டிய நிலையில் அது அணிக்கு நிச்சயமாக பாதிப்பாக மாறும்.
அதே போல ஷர்துல் தாக்குரும் அணியில் பும்ரா, ஷமி அல்லது முகமது சிராஜ்-க்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்படுவார். பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக அவர் ஆடக் கூடும். ஆனால், முக்கிய போட்டிகளில் அவரை ஆட வைப்பது இந்திய அணிக்கு ஆபத்தாகவே முடியும்.