மனைவி டார்ச்சர்... விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்.. வெளிவந்த உண்மைகள்!
பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்தது. ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்தது. ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஷிகர் வானை விட 10 ஆண்டுகள் ஆயிஷா மூத்தவர் ஆவார். எனினும் இருவரும் அன்பாக வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு ஜோராவர் என்ற ஒரு குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் இந்த தம்பதிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஓரளவுக்கு சமாளித்து பார்த்த தவான் இனிமேல் முடியாது எனக்கூறி டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு விவகாரத்து வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார்.
அப்போது நீதிமன்றம் நடத்திய விசாரணையில் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தவானை மன ரீதியில் டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாக தெரியவந்தது.
மேலும் ஷிகர் தவான் பணத்தில் ஆஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கி விட்டு அதனை தமது பெயருக்கு எழுதிக் கொடுக்க ஆயிஷா முகர்ஜி தவானை வற்புறுத்தியதும் தெரிய வந்திருக்கிறது.
மேலும் தமது முன்னாள் கணவருக்கு பிறந்த மகள்களின் கல்வி செலவை ஷிகர் தவான் ஏற்றுக்கொண்டு மாதம் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என ஆயிஷா முகர்ஜி கூறி இருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் ஷிகர் தவான், விவாகரத்து தாக்கல் செய்தார். அப்போது தனக்கும் ஆயிஷா முகர்ஜிக்கும் பிறந்த மகனை காண நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.
அப்போது ஷிகர் தவானுக்கு பிறந்த மகனை டெல்லியில் வந்து அடிக்கடி பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் ஆயிஷா முகர்ஜி உறுதி அளித்திருந்தார்.
ஆனால் அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஷிகர் தவான் தரப்பு வைத்த குற்றச்சாட்டுக்கு எந்த விளக்கமும் ஆயிஷா முகர்ஜி தரப்பிலிருந்து தரப்படவில்லை.
இதன் மூலம் ஷிகர் தவானுக்கு மனைவி ஆயிஷா மெண்டல் டார்ச்சர் கொடுத்தது உறுதியாகிவிட்டதாக கூறி இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி ஹரிஷ் குமார் அறிவித்தார்.
மேலும் மகனை அடிக்கடி இந்தியா வந்து ஷிகர் தவானுக்கு காட்ட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் ஷிகர் தவானுக்கு இருந்த குடும்ப பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.