டி20 உலக கோப்பையில் பறிப்போன வாய்ப்பு... வீணடித்த சிஎஸ்கே வீரர்!

இந்த கோப்பையை எப்படியாவது வெற்றிக்கொண்டு டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

டி20 உலக கோப்பையில் பறிப்போன வாய்ப்பு... வீணடித்த சிஎஸ்கே வீரர்!

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்திய அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுதான் கடைசி டி20 உலக கோப்பை தொடராக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இதனால், இந்த கோப்பையை எப்படியாவது வெற்றிக்கொண்டு டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே, கவனத்தை ஈர்த்தார். பேட்டிங்கில் களமிறங்கி சிவம் துபே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 

இதனால் சிவம் துபே இந்திய டி20 அணியில் ஆல்ரவுண்டராக இடம் பெறுவார் என்று எதிர்பார்த நிலையில், சிவம் துபேக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், டி20 உலக கோப்பை அணியில் பெயர் சேர்க்கப்பட்ட பிறகு சிவம் துபே, பேட்டிங்கில் கடுமையாக தடுமாற தொடங்கினார். 0,0,21, 18, 7 ஆகிய ரன்கள் தான் அடித்திருந்தார். 
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன்னுடைய பந்துவீச்சு பார்மை மீட்டு தன்னுடைய திறமையை நிரூபித்ததால், இந்திய டி20 அணியில் சிவம் துபேவை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

ஏற்கெனவே ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பதால் சிவம் துபே போன்ற ஒரு இடது கை பேட்ஸ்மேனை கூடுதலாக சேர்க்க இந்திய அணி முடிவெடுக்காது.

ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும் விராட் கோலி மூன்றாவது வீரராகவும் களமிறங்கினால் ஹர்திக் பாண்டியா என ஒரு ஆல்ரவுண்டருக்கு மட்டும்தான் இடம் கிடைக்கும். 

இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய சிவம் துபே டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்தவுடன் தடுமாறியது அவருக்கு பெரும் பின்னளவை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கவலையடைந்து உள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp