அவர் பார்க்கும்போது பந்துவீசினேன்... அது என் அதிர்ஷ்டம்! மறைந்த ஜாம்பவான் குறித்து உருகிய வீரர்!
மறைந்த ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே குறித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாக உள்ள சோயப் பஷீர் உருக்கமாக கருத்து வெளியிட்டு உள்ளார்.
மறைந்த ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே குறித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாக உள்ள சோயப் பஷீர் உருக்கமாக கருத்து வெளியிட்டு உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2024 ஜனவரியில் இங்கிலாந்து களமிறங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் மூன்று வீரர்கள் அறிமுகமாகின்றனர். அவர்களில் சோயப் பஷீரும் ஒருவர்.
20 வயதாகும் இவர் இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், இவர் மறைந்த அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவை தொடர்பில் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், 'UK ராயல்ஸ் அகாடமியில் எனது பயிற்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று, சிறந்த ஷேன் வார்னேவை சந்தித்துப் பேசியது தான். அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில பந்துகளை வீசும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, மேலும் அவர் எனக்கு சில மதிப்புமிக்க குறிப்புகளைக் கொடுத்தார்' என தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 2022ஆம் ஆண்டில் தனது 52வது வயதில் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.