பாகிஸ்தான் வீரர் மேட்ச் பிக்சிங்... சிறைக்கு அனுப்ப திட்டம்.. தீவிர நடவடிக்கை எடுக்கும் ஐசிசி!

டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை குவித்த முதல் வீரராக இருக்கும் சோயிப் மாலிக், மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு உடனே வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். 

பாகிஸ்தான் வீரர் மேட்ச் பிக்சிங்... சிறைக்கு அனுப்ப திட்டம்.. தீவிர நடவடிக்கை எடுக்கும் ஐசிசி!

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில், பார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடிய சோயிப் மாலிக், யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து மூன்று நோ-பால்களை வீசினார். 

ஸ்பின்னர் ஒரு நோபால் வீசுவதே அதிகம். ஆனால், மாலிக் தொடர்ந்து மூன்று நோபால்களை வீசியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, வங்கதேச பிரீமியர் லீக் தொடரை நடத்தும் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இறுதியில், மாலிக்கை தடை செய்து, வீட்டுக்கு அனுப்பினார்கள்.

சமீபத்தில், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்த மாலிக், உடனே நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துகொண்டார். 
சோயிப் மாலிக், திருமணம் கடந்த உறவில் இருந்ததை, தெரிந்துகொண்ட பிறகுதான் சானியா மிர்சா விவாகரத்து செய்ததாகக் கருதப்படுகிறது. 

சோயிப் மாலிக் ஏற்கனவே ஒரு திருமணம் செய்திருந்தார். அடுத்து சானியா மிர்சாவை திருமணம் செய்திருந்த நிலையில், தற்போது அவருக்கு மூன்றாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆசிய மண்ணில், டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை குவித்த முதல் வீரராக இருக்கும் சோயிப் மாலிக், மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு உடனே வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். 

பார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடிய அவர், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்தான், தொடர்ந்து மூன்று நோபால்களை வீசினார்.

மாலிக் மூன்று நோபால்களை வீசியது பிரச்சினை இல்லை. மூன்று நோபால்களின் போதும் அவர், கிரீஸை மிதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது தெரிய வந்தது. 

முன் பகுதி பாதத்தை மட்டுமே, தரையில் படும்படி பந்துவீசினார். ஆனால், மற்ற பந்துகளின்போது பாதம் முழுவதுமாக தரையில் பட்டது. இதுதான், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், டெத் ஓவரில் பேட்டிங் செய்த சோயிப் மாலிக், 6 பந்துகளில் 5 ரன்களை மட்டும் சேர்த்ததும், சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சோயிப் மாலிக் மீது விசாரணை நடத்தப்பட்டது. 

அதன்பிறகு, அவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, பார்சூன் பாரிஷல் அணி அதிரடியாக அறிவித்தது. இதனால், சோயிப் மாலிக் துபாய்க்கு திரும்பினார். 
இந்நிலையில், சோயிப் மாலிக் மீது விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குற்றம் உறுதியானால், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், ஐசிசியும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. ஆகையால், மாலிக் விரைவில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற வாய்ப்புகள் இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp