கோலி, கங்குலி ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு... கடும் நெருக்கடியில் ஸ்ரேயாஸ் ஐயர்!
ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். எனினும் அதன் பிறகு அவரிடம் இருந்து குறிப்பிட தகுந்த ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கவில்லை.
மேலும் அணியின் வெற்றியை உறுதி செய்து தன்னுடைய இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த வாய்ப்பு அவர் வீணடித்தார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் தான் காலியாகும் என்ற நிலை இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய சொந்த ஊரான மும்பையில் இன்று விளையாட உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் சதம் அடித்தால் மட்டுமே அவருடைய இடம் உறுதியாக இருக்கும். இந்த போட்டியிலும் அவர் தன்னுடைய வாய்ப்பை வீணடித்தால் அவருக்கு பதில் இஷான் கிஷன் விளையாட கூடும்.
அதனை மட்டுமல்லாமல் மீண்டும் உலக கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் திரும்ப வாய்ப்பு இருக்காது. நடப்பு உலக கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் களமிறங்கி ஆறு இன்னிங்ஸ் விளையாடி 134 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 33 ஆகும். இது ஒரு மோசமான செயல்பாடு இல்லை என்றாலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பால் வீசினால் ஆட்டம் இழந்து விடுகிறார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் சேர்த்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த 65 ரன்களை ஸ்ரேயாஸ் மூன்று இன்னிங்ஸ்க்குள் பெற வேண்டும்.
அப்படி செய்யும் பட்சத்தில் கங்குலி, விராட் கோலி ஆகியோரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. கங்குலி 52 ,விராட் கோலி 53 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்திருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்று பெருமையை சர்வதேச அளவில் பெற்றிருக்கிறார். இந்திய தரப்பில் ஷிகர் தவான் 48 இன்னிங்ஸில் 2000 ரன் கடந்து இரண்டாவது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.