சிஎஸ்கே கூட தோல்வியடைந்தது நல்லதுக்குதான்... வித்தியாசமான விளக்கம் கொடுத்த கில்..

குஜராத்தின் கேப்டனாக இருந்த ஹர்திக் மும்பையில் இணைந்ததால் அந்த அணியை தற்போது வழிநடத்தும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருந்தது. 

சிஎஸ்கே கூட தோல்வியடைந்தது நல்லதுக்குதான்... வித்தியாசமான விளக்கம் கொடுத்த கில்..

17 வது ஐபிஎல் சீசனில் அனுபவம் வாய்ந்த கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சிலர் கேப்டனாக இல்லாமல் இளம் வீரர்களே இந்த முறை அதிகளவான அணிகளை தலைமை தாங்கி வருகின்றனர்.

சிஎஸ்கே அணிக்காக இத்தனை காலம் கேப்டனாக வழி நடத்தி வந்த தோனி, திடீரென தான் கேப்டன் பகுதியில் இருந்து விலகுவதாகவும் ருத்துராஜை புதிய கேப்டன் என்றும் அறிவித்திருந்தார். 

குஜராத்தின் கேப்டனாக இருந்த ஹர்திக் மும்பையில் இணைந்ததால் அந்த அணியை தற்போது வழிநடத்தும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருந்தது. 

இவர் மும்பைக்கு எதிராக சிறப்பாக கேப்டன்சி செய்து போட்டியை வெற்றி பெற வைத்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது மோதிய போட்டியில் முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்திருந்தது.

20 ஓவர்களில் அவர்கள் 206 ரன்கள் எடுக்க, தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் வெற்றி பெறும் வாய்ப்பையும் இழந்தனர். கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் 143 ரன்களே எடுக்க, சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் 2 வது வெற்றியை பெற்றிருந்தது.

முதல் போட்டியில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த கில், சென்னைக்கு எதிரான தோல்விக்கு பின் பேசுகையில், “நாங்கள் பேட்டிங் செய்தபோது எங்களை அவர்கள் ஆட்டமிழக்க செய்ததும் அவரது திட்டங்களை நிறைவேற்றிய விதமும் நன்றாக இருந்தது.

சிஎஸ்கேவுக்காக அதிரடியா நான் விளையாட இதுதான் காரணம்... ஷிவம் துபே சொன்ன காரணம்!

பவர் பிளேயில் சிறப்பான ரன் அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போனதால் அது எங்களுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்திருந்தது. 

டி20 போட்டிகளில் எப்போதுமே 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருப்பது பிரச்சினையாக தான் இருக்கும். இந்த மைதானத்தில் நாங்கள் 190 முதல் 200 ரன்கள் வரை சேசிங் செய்யலாம் என நினைத்தோம்.

இந்த போட்டி பந்து வீச்சாளருக்கு நிறைய கற்றுக் கொள்ளும் வழியாகவும் இருக்கும். அதனால், இந்த போட்டி தொடரின் நடுவிலோ அல்லது கடைசியிலோ வராமல் இப்போது வந்தது மிகவும் சந்தோஷமாக தான் உள்ளது. பேட்டிங்கில் நாங்கள் நிறைய தவறுகளை செய்து விட்டோம் என உணர்கிறேன்.

குஜராத் போன்ற அணிக்கு கேப்டனாக இருப்பது உற்சாகமாக இருப்பதுடன் கடந்த இரண்டு முறையும் ஃபைனல் சென்ற அணி என்பதால், மீண்டும் அப்படி நடக்க வேண்டுமென்ற ஆவலும் அதிகம் உள்ளது” என கில் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp