சுப்மன் கில் பாகிஸ்தான் போட்டிக்கு திரும்புவாரா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் புதன்கிழமை நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் புதன்கிழமை நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி ஏற்கனவே டெல்லி வந்த அடைந்திருக்கிறார்கள்.
தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஓடும் ஒரே கேள்வி கில் நாளைய ஆட்டத்தில் களமிறங்குவாரா இல்லையா என்பதுதான்.
ஏனென்றால் தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கவில்லை. காரணம் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கில் இன்னும் முழு உடல் தகுதியை அடையாததால் அவர் அணியில் இடம் பெறவில்லை
இதனால் அவருக்கு பதிலாக இசான் கிஷன் சேர்க்கப்பட்டிருந்தார்.
எனினும் கிஷன் டக் அவுட் ஆனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் கில் எப்போது வருவார் என்ற ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. கில் 80 சதவீதம் வரை குணமடைந்து விட்டதாகவும் அவர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்று இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கில் 100% உடல் தகுதி இட்ட இன்னும் பத்து நாட்கள் கூட ஆகலாம் என தெரிகிறது.
இருப்பினும் கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஏனெனில் கில்லுக்கு மிகப் பிடித்த மைதானமான அகமதாபாத்தில் தான் அந்த ஆட்டம் நடைபெறுகிறது.
இதனால் அந்த போட்டியில் களமிறங்க கில் ஆர்வம் காட்டி வருகிறார். இன்னும் அதற்கு நான்கு நாட்கள் உள்ள நிலையில் அதற்குள் கில் 100% உடல் தகுதியை எட்டி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆப்கானிஸ்தான் போட்டியில் இசான் கிஷன் தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்பது ஏறக்குறைய உறுதியான நிலையில் பாகிஸ்தான் போட்டியில் கில் திரும்புவார் என நம்பப்படுகிறது.