அந்த இடத்துலேயே தோத்துட்டோம்.. விரக்தியில் பேசிய சுப்மன் கில்..

குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீரென விலகி இருந்ததால் அந்த அணியின் தலைமை பொறுப்பு இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது. 

அந்த இடத்துலேயே தோத்துட்டோம்.. விரக்தியில் பேசிய சுப்மன் கில்..

குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீரென விலகி இருந்ததால் அந்த அணியின் தலைமை பொறுப்பு இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது. 

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சிறப்பாக வெற்றியை குவித்திருந்த குஜராத் அணி, இரண்டாவது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டிருந்த குஜராத் அணி சிறப்பாக ஆடி இந்த போட்டியில் வெற்றி பெற்றதுடன் புள்ளி பட்டியலில் நான்கு ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது. 

ஆஷிஷ் நெஹ்ராவின் பயிற்சியில் கில்லும் சிறப்பாக தலைமை தாங்கி வருவதால் அனைத்து வீரர்களுமே நல்ல பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர்கள் எதிர்கொண்டு இருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 199 ரன்களை எடுத்திருந்தது. முந்தைய ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த சுப்மன் கில், இந்த போட்டியில் 89 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடியும் பவுண்டரிகளை விளாசி இருந்தார். 

இதனையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அதனை போட்டி முழுக்க தொடர முடியாமல் போனது.

ஷசாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அசர வைத்திருந்தது. போட்டியே வெற்றி பெற முடியாது என்ற ஒரு கட்டத்தில் இருந்து பஞ்சாப் அணியை மீட்டு வெற்றி பெற வைத்திருந்தார் ஷசாங்க் சிங். 

எதிர்பாராத இந்த தோல்விக்கு பின் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், “இரண்டு கேட்ச்களை தவற விட்டோம் என நினைக்கிறேன். கேட்ச் வாய்ப்பினை இழந்தாலே போட்டியை ஜெயிப்பது எளிதாக இருக்காது.

பந்து வீச்சாளர்கள் நல்ல பணியை செய்தனர். நாங்கள் குறைவாக ரன்களை எடுத்தோம் என்று நான் சொல்லமாட்டேன். புதிய பந்து என்னவோ செய்தது. 15 வது ஓவர் வரை எங்கள் வசம் தான் போட்டி இருந்தது. 

நாம் எதிர்பார்க்காத, நாம் பார்க்காத வீரர்கள் களத்தில் இறங்கி இப்படி போட்டியை முடித்து வைப்பது தான் ஐபிஎல் தொடரின் அழகு” என கில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தோல்வியின் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp