2ஆவது டெஸ்டில் விளையாடாத கில்... கேஎல் ராகுலுக்கு அடித்த அதிஷ்டம்

நடுவரிசையில் களமிறங்கி வந்த கே எல் ராகுலுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. 

2ஆவது டெஸ்டில் விளையாடாத கில்... கேஎல் ராகுலுக்கு அடித்த அதிஷ்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ரோகித் ஷர்மா, கில், முகமது சமி ஆகிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றது. நடுவரிசையில் களமிறங்கி வந்த கே எல் ராகுலுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதில் கே எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக வரும் ஆறாம் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. 

அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் நிற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக செயல்பட்டு இருக்கிறது. இதுவரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிங்க் நிற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது கிடையாது.

இந்த நிலையில் கில்லுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவர் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. 

கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி இருப்பதால் அவர் ஜெயஸ்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்க போகிறார். இதன் காரணமாக கேஎல் ராகுல் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. 

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தேவுதட் படிக்கல் இரண்டாவது போட்டியில் பங்கேற்க மாட்டார். அது மட்டுமல்லாமல் துருவ் ஜூரல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் தன்னுடைய திறமையை நிறைவேற்றி இருப்பதால் 5 டெஸ்ட் போட்டிகளிலும் அவரை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. 

வேகப் பந்துவீச்சில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிகிறது. அடிலெய்ட் ஆடுகளம் இந்தியாவின் ஆட்டத் திறமைக்கு ஏற்ற மைதானம் ஆகும். இதனால் அங்கு இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது என்பதால் தான் பந்து நன்றாக ஸ்விங் ஆகக்கூடிய பிங்க் நிற பந்தை வைத்து பகல் இரவு ஆட்டத்தை அடிலெய்டில் ஆஸ்திரேலியா நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால், தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp