சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்யலையா?.. என்ன ஆச்சு?
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் திருமண விழா ஒன்றுக்கு சென்றுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பேருந்தில் பயணிக்கும் பயணியாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய சித்தார்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆயுத எழுத்து படத்தில் அடுத்து வெயிட்டான கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் மாதவன் உடன் இணைந்து நடித்தார்.
தெலங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று காலை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
தீயாக இந்த செய்தி பரவி அனைத்து ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் அதிதி ராவின் உறவினர் திருமணத்துக்குத்தான் சித்தார்த் சென்றிருக்கிறார் என்றும் வேறு சில தகவல்களும் உலா வருகின்றன.