சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?

இதயும் பாருங்க

முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயதெல்லை 18 – அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தோன்றியது. அதே போன்று இன்றும் சந்திர கிரகணம் நிகழவிருக்கின்றது.

சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் எனப்படுகின்றது.

இந்தியா, இலங்கை நேரப்படி இன்று இரவு சரியாக 12.13 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்பு, 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, மத்திய காலம் இரவு 3 மணிக்கும், பின்னர், 4.30 மணிக்கு முடிகிறது.

கிரகண நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?

  • செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
  • கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
  • கிரகண காலத்தில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும். பட்டம் கட்டிக் கொள்வதென்றால், பனைஓலையில், மஞ்சள் நூலை கட்டி, கிரகணத்துக்கான ஸ்துதியை எழுதி கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கிரகணம் முடிந்ததும், ஸ்நானம் செய்ததும் பட்டத்தை நீர்நிலைகளில் விட்டு விட வேண்டும்.

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை

  • கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன.
  • கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
  • கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

கிரகணத்தின் முடிந்ததும் செய்ய வேண்டியவை

  • கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
  • பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரான கணேஷமூர்த்தி தியாகராஜா (44 வயது),...

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...

More Articles Like This