சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபாயினால் அதிகரிப்பு
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சினோபெக் நிறுவனம் இன்று (01.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சினோபெக் நிறுவனம் இன்று (01.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது புதிய விலை 348 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 417 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.