சிவகார்த்திகேயன் வைத்த இரவு பார்ட்டி- வசமாக சிக்கிய 2 பிரபலங்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் இரவு பார்ட்டி வைத்து தான் இப்படி மோசமான வேலைகளை செய்தார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் இரவு பார்ட்டி வைத்து தான் இப்படி மோசமான வேலைகளை செய்தார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.
திரைப்படங்கள் ஹீட்டாகுவதை விட அந்த திரைப்படங்களில் வெளியாகிய பாடல்கள் பெரியளவு ஹீட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இமானிற்கும் சிவாகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அடுத்து வந்த திரைப்படங்களில் அவர் இசையமைக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு இவர் தான் காரணம் என்றும் ஓபனாக பேசியுள்ளார்.
குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது.
அத்துடன் சிவகார்த்திகேயன் அவருடைய இன்ஸ்டாகிராமில் அவருடைய பெயருக்கு பின்னார் Doss என சேர்த்துள்ளார். இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதனை பதிவாக செய்து ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
மேலும் இன்னும் சிலர், “ இது தேவையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.