விசேட அறிவிப்புடன் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இராஜினாமா செய்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று (21) விசேட அறிக்கையொன்றை விடுத்து இராஜினாமா செய்தார்.
2004ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார். காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலில் பிரவேசித்தார்.
அவர் 2004, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளமையால் மனசாட்சிப்படி செயற்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று (21) காலை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பின்னர் அவர் தனது உத்தியோகபூர்வ முடிவை அறிவித்தார்.