அவுட் ஆக்கியதால் நடுவிரலை காட்டிய வங்கதேச வீரர்? பொங்கி எழுந்து ஹாட்ரிக் எடுத்த இலங்கை பௌலர்!

வங்கதேசம் சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி சர்ச்சையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

அவுட் ஆக்கியதால் நடுவிரலை காட்டிய வங்கதேச வீரர்? பொங்கி எழுந்து ஹாட்ரிக் எடுத்த இலங்கை பௌலர்!

வங்கதேசம் சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி சர்ச்சையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில், கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

களமிறங்கிய இலங்கை அணியில், ஓபனர் குஷல் மெண்டிஸ் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி 55 பந்துகளில் தலா 6 பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து 86 ரன்களை குவித்து அசத்தினார்.

இலங்கை அணியில், குஷலை தவிர மற்ற பேட்டர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ஷனகா (19), மேத்யூஸ் (10), கேப்டன் ஹசரங்கா (15) போன்றவர்களில் யாரும் 20+ ரன்களை அடிக்கவில்லை. இறுதியில், இலங்கை அணி 20 ஓவர்களில் 174/7 ரன்களை எடுத்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியை, இலங்கை பௌலர் நுவன் துஷர துவம்சம் செய்தார். துஷர அபாரமாக பந்துவீசி 2, 3, 4, 5 ஆகிய பேட்டர்களை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

குறிப்பாக, கேப்டன் ஷான்டோ (1), டௌஹித் க்ரிடோய் (0), முகமதுல்லா (0) ஆகியோரை வீழ்த்தி, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். மொத்தம் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

கடைசியில் 8 மற்றும் 9ஆவது இட டெய்ல் என்டர்ஸ் ரிஷாத் ஹோசைன் (53), டஸ்கின் அகமது (31) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடிக்க இறுதியில், வங்கதேச அசி 146/10 ரன்களை மட்டும் சேர்த்து, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அப்போட்டியில், டௌஹித் க்ரிடோயை, துஷார போல்ட் ஆக்கி, 2 பந்தில் 2 விக்கெட்களை சாய்த்தார். துஷார பந்தை, கணிக்கவே முடியாமல் தடுமாறி விழுந்து டௌஹித் போல்ட் ஆனதால், இலங்கை வீரர்கள், சந்தோஷத்தில் துள்ளி  குதித்தனர்.

இதனை பார்த்து, க்ரிடோய், நடுவிரலை காட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. க்ரிடோய் கையை நீட்டியபோது, நடுவர் அதனை மறைத்ததுபோல், தொலைக்காட்சி வீடியோ இருக்கிறது. 

அவர் நடுவிரலை காட்டினாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், அவர் நடுவிரலை தான் காட்டினார் என இலங்கை ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp