பாபர் அசாமை கையெடுத்து கும்பிட்ட ஸ்மித்... ஏன் என்ன நடந்தது தெரியுமா?
2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் களமிறங்கும் பேட்டர்கள் ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று லெக் ஸ்டெம்ப் மற்றும் நடு ஸ்டெம்ப் திசையில் சரியாக நிற்கிறேனா என்பதை நடுவரிடம் கேட்டு அதற்கு ஏற்றார்போல் மார்க் பண்ணுவார்கள்.
உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஊசி போட்டுக் கொண்டு விளையாடிய முகமது ஷமி! அதிர்ச்சி தகவல்!
அந்த வகையில் பாபர் அசாம் ஆடுகளத்திற்கு வந்து ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று நடுவரிடம் கேட்பார். அப்படி எடுக்கும் போது ஸ்டெம்ப் பின்னால் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஏதோ (சரியாவே எடுக்க தெரியல என்பது போல) கூறினார். உடனே பாபர் அசாம் பேட்டை நீட்டி ஏதோ (நீ எடுத்து கொடுக்கிறாயா என்பது போல) கூறினார். உடனே ஸ்மித் கையெடுத்து கும்பிட்டு ஆள விடு சாமி என்பது போல சென்றார்.
பேட்டர்கள் இப்படி எடுக்க வரும் போது எல்லாம் ஸ்மித் இது மாதிரி எதாவது சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கும் மேலாக அவர்கள் மார்க் செய்து வச்ச இடத்தை தடம் தெரியாத மாதிரி அழித்து விடவும் செய்துள்ளார். அந்த வகையில் இது நடந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.