83 ரன்களில் தென்னாப்பிரிக்காவை  சுருட்டி... 8 க்கு 8 வென்ற இந்திய அணி.. 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.

83 ரன்களில் தென்னாப்பிரிக்காவை  சுருட்டி... 8 க்கு 8 வென்ற இந்திய அணி.. 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை 83 ரன்களின் சுருட்டி இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இதுவரை இந்திய அணி தோல்வியே தழுவாமல் விளையாடி வந்த நிலையில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இந்தியா எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும்,கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது பிறந்தநாளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 101 ரன்கள் சேர்த்து சச்சினின் சாதனையை சமன் செய்தார். 

ஸ்ரேயாஸ் ஐயர், தன் பங்கிற்கு 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து அசுர பலத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் படை களம் இறங்கியது. 

ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.

இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். தொடர்ந்து சதம் அடித்து வந்த குயின் டன் டி காக் ஐந்து ரன்களிலும்,கேப்டன் பெவுமா 11 ரன்களிலும் வேண்டர் டூஷன் 13 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் ஒன்பது ரன்களிலும், கிளாசண் ஒரு ரன்னிலும்,டேவிட் மில்லர் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து இந்திய வீரர்கள் நெருக்கடியை கொடுக்க தென்னாப்பிரிக்க அணியின் கீழ் வரிசை வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவரில் 83 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

ஷமி குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் விளையாடிய எட்டு போட்டிகளிலும் இந்தியா வென்று இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp