ஒரே நாளில் குயின்டன் டி காக் படைத்த 6 சாதனைகள்.. தென்னாப்பிரிக்க அணி வரலாற்றிலேயே முதல் முறை!
இந்த தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா நான்கு சதம் அடித்தார். இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்து புதிய ரெக்கார்ட் ஒன்றைப் படைத்தார்.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டிகாக் நான்கு சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இந்த தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்று மட்டும் பல ரெகார்டுகளை அவர் படைத்திருக்கிறார்.
திடீரென ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்.. இங்கிலாந்துக்கு மற்றும் ஒரு அடி.. என்ன காரணம் தெரியுமா?
உலககோப்பை வரலாற்றிலே ஒரு தொடரில் 500 ரன்களை தொட்ட முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை குயிண்டன் டி காக் படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை குயிண்டன் டி காக் படைத்திருக்கிறார்.
மேலும், ஒரு உலகக்கோப்பை தொடரில் நான்கு சதம் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெயரை குயின்டன் டிகாக் பெற்று இருக்கிறார்.
இதற்கு முன்பாக சங்ககாரா ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெயரும் குயின்டன் டிகாக்கிற்கு சேர்ந்தது.
இதனை தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையும் குயிண்டன் டிகாக் பெற்றார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் ஏழு இன்னிங்ஸில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையும் குயிண்டன் டிகாக்கிற்கு கிடைத்தது.