18 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் தோனி சாதனையை தவறவிட்ட வீரர்
குயிண்டன் டிகாக் இரட்டை சதம் அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் அவர் 45.1 வது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி தொடக்க வீரர் குயின் டன் டி காக் அதிரடியாக விளையாடி 140 பந்துகளில் 174 ரன்கள் விளாசினார்.
குயிண்டன் டிகாக் இரட்டை சதம் அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் அவர் 45.1 வது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
குயின்டன் டி டாக் இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் குயிண்டன் டி காக் தோனியின் 18 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அதனை தகர்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் தோனி 183 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி இன்னும் வகித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தற்போது குயிண்டன் டி காக் 178 ரன்கள் உடன் உள்ளார்.
லிட்டன் தாஸ் 176 ரன்கள் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த இன்னிங்ஸில் குயின் டன் டி காக் 174 ரன்கள் அடித்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோன்று ஜே எஸ் மல்கோத்ரா என்ற வீரர் 173 ரன்களுடனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் 172 ரன்கள் உடனும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
தோனியின் ரெக்கார்டை முறியடிக்க குயின்டன் டிகாக் இரண்டு முறை வாய்ப்பு ஏற்பட்டும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உலகக் கோப்பையில் குயிண்டன் டி காக் மூன்றாவது சதத்தை அடித்திருக்கிறார்.