இலங்கை தேசிய கீதத்தின் போது நடந்த சோகம்.. வெயிலில் மயங்கி விழுந்த சிறுவன்!
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று புனேவில் நடைபெற்ற 30 வது லீக் ஆட்டத்தில் இலங்கையும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரிட்சை நடத்தியது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.
அவர்களுக்கு முன்பாக சிறுவர்கள் நிற்க வைக்கப்படுவார்கள். இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய கீதம் மிகவும் நீண்ட நேரம் வாசிக்கப்படும்.
இரண்டு நிமிடங்கள் 54 வினாடிகள் வரை இலங்கை அணியின் தேசிய கீதம் ஓடும். இது மிக நீண்ட தேசிய கீதங்களில் ஒன்றாகும்.
அப்போது இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் முன் நிற்க வைக்கப்பட்டு இருந்த சிறுவன் ஒருவர் வெயிலின் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்தார்.
எனினும் தேசிய கீதம் ஓடிக்கொண்டிருந்தாலும் சிறுவன் மயங்கி விழுவதை கண்ட இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் உடனடியாக அந்த சிறுவனை பிடித்து கீழே விழாமல் பார்த்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அந்த சிறுவனை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டீஸ், செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.