ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 320 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் 12 கிராமங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் இதுவரை 320 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெராத் நகருக்கு அருகில், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.