எப்போதுமே ஒருவரை நம்பி இல்லை... நீங்க இல்லாம வெற்றிபெற முடியாதுனு நினைச்சீங்களா.. கோலியை சீண்டிய கவாஸ்கர்!
36 ரன்களில் ஆல் அவுட் ஆகியும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் சிட்னியில் நடந்த போட்டியில் தோல்வியை தடுக்கவும் சிறப்பாக ஆடி இருந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இல்லாத போது இளம் வீரர்களை இந்த தொடரில் களமிறக்கி அதன் மூலம் தொடரை வென்று அசத்தி உள்ளார் ரோஹித் ஷர்மா.
இப்படி பெரிய வீரர்களை நம்பாமலேயே இந்திய அணி சிறப்பாக ஆடி வருவமு தொடர்பில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் பெரிய வீரர்கள் இல்லாமல் இருந்தனர். ஆனாலும் அதை சிறப்பாக கையாண்டு அவர்கள் அருமையான வெற்றியை பெற்றனர்.
36 ரன்களில் ஆல் அவுட் ஆகியும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் சிட்னியில் நடந்த போட்டியில் தோல்வியை தடுக்கவும் சிறப்பாக ஆடி இருந்தனர்.
நட்சத்திர வீரர் அஸ்வின் கூட செய்யாத சாதனையை எட்டிப் பிடித்த இளம் வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் இளம் வீரர்கள் காட்டிய தைரியத்தையும், மன உறுதியையும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் தொடரிலும் பார்க்க முடிகிறது.
சில பெரிய வீரர்கள் இல்லை என்றாலும் இந்திய அணியால் வெற்றிப்பெற முடியும். ஏதாவது பெரிய வீரர்கள் இந்த இரண்டு தொடர்களையும் நான் இல்லாமல் ஜெயிக்க முடியாது என நினைத்திருந்தால் அது ஒரு விஷயமே கிடையாது. கிரிக்கெட் என்பது குழுவாக செயற்படும் போட்டி. அது எப்போதுமே ஒருவரை நம்பி இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொடர்களிலுமே விராட் கோலி இல்லாத நிலையில், கவாஸ்கர் மறைமுகமாக கோலியை தான் தாக்குகிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.