விராட் கோலி நீக்கப்படுவாரா? ராகுல் டிராவிட் என்ன சொன்னார் தெரியுமா?

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார வெற்றிகளை பெற்று, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

விராட் கோலி நீக்கப்படுவாரா? ராகுல் டிராவிட் என்ன சொன்னார் தெரியுமா?

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார வெற்றிகளை பெற்று, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக மோத உள்ளது. போட்டிகள் ஜூன் 20, 22, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இந்திய அணி, தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும். இப்போட்டி ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு, பார்படாஸில் துவங்கி நடைபெறும்.  

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். 

லீக் சுற்றில் கோலி 4, 1, 0 ஆகிய ரன்களைதான் அடித்தார். இதனால், சூப்பர் 8 சுற்றில் கோலி ஆடுவாரா என்ற கேள்வி இருந்தது. இதுகுறித்து பதில் அளித்த டிராவிட், ‘‘நிலைமையை பொறுத்துதான் முடிவு எடுப்போம். தற்போதைக்கு, அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாகதான் இருக்கிறது’’ எனக் கூறினார்.

மேற்கிந்தியத் தீவுகள் பிட்ச்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இதனால், கூடுதல் ஸ்பின்னராக குல்தீப் யாதவ் ஆடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த டிராவிட், ‘‘பிட்சின் தன்மையை ஆராய்ந்து, அதற்கு ஏற்றார்போல்தான் பௌலிங் காம்பினேஷனை தேர்வு செய்ய முடியும்’’ என்றார்.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தினால், அரையிறுதிக்கு கிட்டதட்ட முன்னேறிவிடும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக படுதோல்வியை சந்திக்காமல் இருந்தாலே போதும் என்ற நிலைதான் இருக்கும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp