சூர்யா

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது தயாரிப்பில் உருவாகி வரும் ஜாக்பாட படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தின் சூர்யாவின் காதல் மனைவி ஜோதிகா ஹீரோயினாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படம் காமெடி ஜோனரில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா இறங்கிய அதிரடி ஆக்‌ஷன் படம் தான் காப்பான். இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 30ம் திகதி திரைக்கு வருகிறது.

இப்படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இந்த இரு படங்களும் தெலுங்கில் வீடோக்காடே மற்றும் பிரதர்ஸ் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

காப்பான் படம் குறித்து இயக்குனர் கேவி ஆனந்த் கூறுகையில், எப்போது, படப்பிடிப்பில் தனது சொந்த மதிப்புகளை கொண்டிருப்பவர் சூர்யா. படங்களில் பெண்களை அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் காட்சிகளில் அவர் நடிக்க விரும்புவதில்லை. படப்பிடிப்பில் தேவையற்ற காதல் காட்சிகள் வந்துவிட்டால், அதனை நீக்கும்படி கூறுவார்.

இப்படத்தில் சூர்யா பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில், வில்லன் கதாபாத்திரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படத்தில், மோகன் லால், சாயிஷா மற்றும் ஆர்யா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.