சூர்யகுமார் படைக்க போகும் மெகா சாதனை.. 6 ரன்கள் மட்டுமே வேணும்!

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் தடுமாறி வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் அதிரடியாக விளையாடுவார்கள்  என, எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யகுமார் படைக்க போகும் மெகா சாதனை.. 6 ரன்கள் மட்டுமே வேணும்!

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, வியாழக்கிழமை தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதவுள்ளதுடன்,  இந்த போட்டியில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார்.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் தடுமாறி வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் அதிரடியாக விளையாடுவார்கள்  என, எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

இவ்வாறான பின்னணியில், சூரிய குமார் யாதவ் ஒரு மெகா சாதனையை எதிர்நோக்கி  உள்ளார். அதாவது, சூரியகுமார் யாதவும் இதுவரை வெஸ்ட் இண்டீசில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 216 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆறு ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுரேஷ் ரெய்னா 221 ரன்கள்  அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 15 ரன்கள் அடித்தால், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 200 ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெறுவார். 

இந்த நிலையில் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெரிய அளவில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதிக்கவில்லை. இதுவரை அவர் மூன்று முறை தான் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடுகிறார்.

அதில் அவர் 112 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலியின் இந்த பட்டியலில் கிடுகிடுவென உயர வேண்டுமென்றால் நடப்பு தொடரில் தன்னுடைய பழைய பார்முக்கு வரவேண்டும்.

இதேபோன்று, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை பண்ட்,  174 ரன்கள் அடித்திருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp