இது முதல் முறை.. சூர்யகுமாருக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்து?
ஏபி டிவில்லியர்ஸ் பிறகு 360 டிகிரி கோணத்தில் எப்படி பந்து வீசினாலும் அடிப்பேன் என்ற பாணியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் இருக்கும்.
டி20 சூப்பர் ஸ்டார் என்றால் அது இந்தியாவை சேர்ந்த சூரிய குமார் யாதவ் தான். ஏபி டிவில்லியர்ஸ் பிறகு 360 டிகிரி கோணத்தில் எப்படி பந்து வீசினாலும் அடிப்பேன் என்ற பாணியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் இருக்கும்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை வகித்து வருகிறார். அந்த அளவுக்கு சூரியகுமார் யாதவ் அபாரமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் தொடரிலே கேப்டனாக களம் இறங்கி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறார்.
இந்த தொடர் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் நன்றாகவே தொடங்கினார். முதல் டி20 போட்டியில் 80 ரன்களும் இரண்டாவது t20 போட்டியில் 19 ரன்களும் மூன்றாவது t20 போட்டியில் 39 ரன்களும் சூரியகுமார் விளாசி பட்டையை கிளப்பினார்.
இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் பெங்களூருவில் நடைபெறுவதால் ரன் குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில் சூரிய குமார் ஆஸ்திரேலியாவை பொளப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் சூரிய குமாரியாதவ் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் திறமையை அவர் அதிகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸில் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது தனிப்பட்ட அளவில் அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இன்னும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சூரியகுமார் யாதவும் தன்னுடைய பழைய பார்மை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் கேப்டன்ஷிப் ஆல் அவருடைய பேட்டிங் திறமை பாதிக்கப்படுகிறது என பிசிசிஐ அவரை பதவியில் இருந்து தூக்கவும் வாய்ப்பு இருக்கிறது.