சொதப்பும் வீரர்... கம்பீர் மீது குற்றம் சுமத்திய அஜித் அகார்கர்? பிசிசிஐ மீட்டிங்கில் நடந்த விவாதம்!

அண்மைகாலமாக சூர்யகுமார் யாதவ் பார்ம் அவுட்டில் இருப்பது, பிசிசிஐ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், அழுத்தங்களை சமாளிக்க முடியாமல், பேட்டிங்கிலும் அவர் சொதப்பி வருகிறார். 

சொதப்பும் வீரர்... கம்பீர் மீது குற்றம் சுமத்திய அஜித் அகார்கர்? பிசிசிஐ மீட்டிங்கில் நடந்த விவாதம்!

டி20 உலகக் கோப்பை 2023 தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாதான் நியமிக்கப்படுவார் எனக் கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

அபார பார்மில் இருந்தத சூர்யகுமார் யாதவ், டி20 அணியில் மட்டுமே இடம்பிடித்து வருவதால்தான் அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்ததாக பிசிசிஐ கூறியதுடன்,  அவர் ஒரு பேட்டராக மட்டும் இருப்பதால், அவருக்கு காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு குறைவு என்பதாலேயே கேப்டன் பதவியை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அண்மைகாலமாக சூர்யகுமார் யாதவ் பார்ம் அவுட்டில் இருப்பது, பிசிசிஐ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், சூர்யகுமாருக்கு போதிய கேப்டன்ஸி அனுபவம் கிடையாது என்ற நிலையில்,  அழுத்தங்களை சமாளிக்க முடியாமல், பேட்டிங்கிலும் அவர் சொதப்பி வருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ், பெரிய ஷாட்களுக்கு முயற்சித்து, அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பியமை விமர்சனத்துக்கு உள்ளானது.

இவ்வாறான நிலையில்,  2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைதொடர், இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் இப்படி சொதப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதனையடுத்து, அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்து, தேவையில்லாத அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து, பிசிசிஐ மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், ஹர்திக் பாண்டியாவுக்கே டி20 அணிக் கேப்டன் பதவியை கொடுப்போம் எனக் கூறியதாகவும், ஆனால், அதனை கம்பீர் ஏற்காமல் இருந்த நிலையில், நினைத்ததுபோல் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

கேப்டன்ஸி அனுபவம் இல்லாத சூர்யகுமார் யாதவ், பார்ம் அவுட் ஆகிவிட்ட நிலையில், இதற்கு கம்பீர்தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பினால் மீண்டும்  ஹர்திக் பாண்டியாவிடமே கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியதாக தகவல் வந்து உள்ளது.

அத்துடன், அஜித் அகார்கரின் இந்த யோசனைக்கு கம்பீர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp