இதுதான் கேப்டன்னு சொல்றது... கோப்பையை வென்ற சூர்யகுமார் செய்த சம்பவம்.. என்னனு தெரியுமா!
5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை வென்றார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதுடன், 5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை வென்றார்.
அத்துடன், முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், வெற்றிக் கோப்பையை பெற்று கொண்டார். ஆனால் அதன் பின்பு அவர் செய்த காரியம் தான் இப்போது ரசிகர்களால் அதிகம் பேசப்படுகின்றது.
அது என்னவென்றால், கோப்பையை வாங்கிய சூர்யகுமார் யாதவ், நேராக இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரிடமும் கோப்பையை கொடுத்து சென்றார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் கேப்டன்கள் அனைவரும் எந்த தொடரில் கோப்பையை வென்றாலும் இளம் வீரர்களிடம் முதலில் கொடுத்து மகிழ்விப்பார்கள்.
அந்த வகைகயில், கங்குலி, டிராவிட், தோனி, விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தொடர்ந்து வந்த பாதையை சூர்யகுமார் யாதவும் பின்பற்றியுள்ளார்.