கேப்டனாக மாறிய ஜடேஜா.. போட்டியில் திடீர் திருப்பம்.. சூர்யகுமாருக்கு என்ன ஆச்சு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.

கேப்டனாக மாறிய ஜடேஜா.. போட்டியில் திடீர் திருப்பம்.. சூர்யகுமாருக்கு என்ன ஆச்சு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.

இந்த போட்டியில் ஃபீல்டிங்கின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களம்விட்டு அகன்ற நிலையில், உடனடியாக ஜடேஜா மாற்று கேப்டனாக வழிநடத்தினார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். 

இதன்பின் முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் ப்ரீட்ஸ்கே 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 4.2வது பந்தில் ஹென்ரிக்ஸ் 8 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து 3.4 ஓவரின் போது இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங் செய்த போது காயம் ஏற்பட்டது. நடக்க முடியாத சூழலில் அவரை இந்திய அணி வீரர்கள் தூக்கி சென்றனர். 

கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரின் போது கேஎல் ராகுல் எப்படி காயமடைந்தாரோ, அதேபோல் சூர்யகுமார் யாதவும் காயமடைந்து களம்விட்டு அகன்றார்.

இதன்பின் துணை கேப்டனான ஜடேஜா, தலைமை பொறுப்பை ஏற்று கொண்டார். இதுவரை இந்திய அணிக்காக தலைமை பொறுப்பை ஜடேஜா ஒருமுறை கூட ஏற்றதில்லை. 
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டுமே சில போட்டிகளில் தலைமை தாங்கினார். அதையும் இடையே ராஜினாமா செய்த நிலையில், முதல்முறையாக இந்திய டி20 அணியை வழிநடத்துகிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஜடேஜா செய்த பவுலிங் மாற்றங்கள் இந்திய அணிக்கு சரியான பலனை அளித்தது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp