வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோற்ற இலங்கை அணி.. கம்பீர் வைத்த ஆப்பு.. நடந்தது என்ன?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றியை நெருங்கிய இலங்கை அணி இந்திய அணியின் சில அதிரடி தீர்மானங்களால் தோல்வி அடைந்தது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஐடியா, தோல்வி அடைய வேண்டிய போட்டியிலும் இந்தியாவை வெற்றிப் பெற செய்து இருக்கின்றது.
30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இலங்கை அணி, 9 விக்கெட்களை கைவசம் இந்த நிலையிலும் போட்டியை சமன் மட்டுமே செய்த நிலையில், அடத்து சூப்பர் ஓவரில் இந்திய அணி எளிதாக வெற்றது.
இந்த வெற்றியின் பின்னணியில் கவுதம் கம்பீரின் முக்கிய தீர்மானம் ஒன்று உள்ளதாக பார்க்கப்படுகின்றது.
அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்ற கம்பீர் டி20 போட்டிகளுக்கு என தனி அணுகுமுறையை வைத்துள்ளார்.
டி20 அணிக்கு தனி கேப்டன் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கவுதம் கம்பீர், ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கிவிட்டு சூர்யகுமார் யாதவை கேப்டனாக ஆக்கி இருக்கிறார்.
அத்துடன், டி20 அணியில் அதிக அளவில் ஆல் - ரவுண்டர்கள் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அவர் அணித் தேர்வை செய்தார்.
இந்த நிலையில்தான்,கடைசி இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் எடுத்தால் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில் 19வது ஓவரை ரிங்கு சிங் வீசினார்.
அவர் 3 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், கடைசி ஓவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தானே வீசினார்.
அந்த ஓவரிலும் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதுடன், ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டதால்,போட்டி டை ஆனது. இதனையடுத்து, இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் வழக்கமே கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்ததுஃ
ஆனால், இந்திய அணியில் கம்பீர் விளையாடிய காலத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் என பல பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.
யுவராஜ் சிங்கை பகுதி நேர பந்துவீச்சாளராக பயன்படுத்தித் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
அதனை இப்போது பயன்படுத்திய கவுதம் கம்பீர் இந்த போட்டியை வென்று உள்ளார்.