இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார் தெரியுமா? சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இப்போது வரை கேள்வியாக மட்டுமே உள்ளது.

இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார் தெரியுமா? சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இப்போது வரை கேள்வியாக மட்டுமே உள்ளது.

டி20 போட்டியில் விளையாட மாட்டேன் என்று ரோகித் சர்மா விலகி விட்ட நிலையில் விராட் கோலியும் அந்த முடிவில்தான் உள்ளார். ரோகித் சர்மா இல்லாத நிலையில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பதவியேற்றார்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்த நிலையில் தற்போது அவஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டித் தொடரில் சூரியகுமார் யாதவ் அந்தப் பணியை சிறப்பாக செய்து உள்ளார். 

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் நீங்கள் கேப்டனாக  தொடர விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சூரியகுமார் யாதவ் பதில் சொல்லி உள்ளார்.

உயிருக்கே ஆபத்து.. பதறிய வீரர்... பாதியில் மேட்ச்சை நிறுத்திய அம்பயர்கள்.. நடந்தது என்ன ?

அவர், தன்னுடைய பார்மில் கேப்டன்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்தது என்றும் தான் கேப்டன் ஆக தன்னுடைய பணியை மிகவும் மகிழ்ச்சியாக மேற்கொள்வதுடன்,. இந்தப் பணியை தொடர்ந்து செய்யவும் விரும்புவதாக கூறி உள்ளார்.

ஆனால், இனி வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்றும் தற்போது தன்னுடைய கவனம் எல்லாம் தென்னாப்பிரிக்க தொடரிலேயே உள்ளதாகவும்,  டி20 உலக கோப்பைக்கு முன்பு நாங்கள் வெறும் ஆறு டி20 போட்டிகள் தான் இன்னும் விளையாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், ஐபிஎல் தொடரில் 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ள நிலையில், டி20 உலக கோப்பை முன் ஐபிஎல் விளையாடுவதால் அது நல்ல அனுபவத்தையும் கொடுக்கும் என்று சூரியகுமார் யாதம் சொல்லியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp