இந்திய அணியில் கேஎல் ராகுல்.. சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு.. இளம் வீரருக்கு அதிஷ்டம்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியான நிலையில், அனைத்து அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த இந்திய அணியில் சாஹல் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்றும் சிவம் துபே இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பேக் அப் வீரர்களாக சுப்மன் கில், அக்சர் படேல், ரியான் பராக் மற்றும் கலீல் அஹ்மத் ஆகிய 4 வீரர்கள் தெரிவாகலாம். விக்கெட் கீப்பருக்கான ரேஸில் ரிஷப் பண்ட் முதலிடத்தில் உள்ளதுடன், பேக் அப் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இருந்தனர்.
ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் இருவரும் ஃபார்மில் உள்ள போதும், இவர்கள் இருவருமே டாப் ஆர்டர் வீரர்கள் என்பதால், கீழ் வரிசையில் விளையாட கூடிய வீரரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்ய முனைப்பு காட்டி வருகின்றது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய துருவ் ஜுரெலை தெரிவுசெய்ய அஜித் அகர்கர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.
ரிஷப் பண்ட்-க்கு சரியான மாற்று வீரராக துருவ் ஜுரெல் இருப்பதாக என்று இந்திய அணி நிர்வாகம் நம்புவதாக பார்க்கப்படுகின்றது.