அந்த வீரர் சொதப்பினாலும் இந்திய டி20 அணியில் நிச்சயம் இடம் கொடுப்பேன்: அகார்கர் அதிரடி!

ஐபிஎலுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து காட்டடி, 2 சதங்களை அடித்த யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தற்போது திடீரென்று ஐபிஎலில் சொதப்பி வருகிறார்.

அந்த வீரர் சொதப்பினாலும் இந்திய டி20 அணியில் நிச்சயம் இடம் கொடுப்பேன்: அகார்கர் அதிரடி!

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான அணியில், சில இடங்களை மட்டுமே பிசிசிஐ உறுதி செய்துள்ளதாகவும், ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து, மீதி இடங்களை நிரப்பவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024 தொடருக்கு முன்புவரை, தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தற்போது ஐபிஎலில் படுமோசமாக சொதப்பி வருகிறார். இதனால், ரோஹித்துடன் ஓபனராக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சீசனில், 14 இன்னிங்ஸ்களில் 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்களை குவித்த ஜெய்ஷ்வால், தற்போது முதல் 5 போட்டிகளில் 24, 5, 0, 12, 24 என மொத்தமே 63 ரன்களை தான் எடுத்துள்ளார். இது ஜெய்ஷ்வாலுக்கு பின்னடைவான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎலுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து காட்டடி, 2 சதங்களை அடித்த யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தற்போது திடீரென்று ஐபிஎலில் சொதப்பி வருகிறார்.

யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஐபிஎலில் சொதப்பினாலும், இதற்குமுன் விளையாடிய கடைசி 10 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதம், 4 அரை சதங்களை அடித்துள்ளார். இதனால், ஜெய்ஷ்வாலை புறக்கணிப்பது கடினம்தான்.

இந்திய அணிக்காக தொடர்ந்து அபாரமாக விளையாடிவிட்டு, தற்போது ஜெய்ஷ்வால் ஐபிஎலில் சொதப்பி வருவதால், இவரை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்க முடியுமா? முடியாதா என்ற கேள்வி இருக்கிறது.

இந்நிலையில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இனி வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சொதப்பினாலும், இவர்தான் ஓபனராக இருப்பார், இவரை இந்தாண்டு ஜனவரியிலேயே, ஆப்கானிஸ்தான் டி20 தொடரை வைத்து தேர்வு செய்துவிட்டதாக, பிசிசிஐ மீட்டிங்கில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp